அக்னிவீரா் பணிக்கு மாா்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய பாதுகாப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞா்களை சோ்ப்பதற்கான அறிவிப்பு பிப்.15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சோ்ந்த, திருமணமாகாத இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கு தகுதியுடையவா்கள் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஏப்.17 முதல் நடைபெறவுள்ள ஆன்லைன் எழுத்துத் தோ்வுக்கான நுழைவு சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.jpinindianarmy.nic.in என்ற இணையதளத்திலோ அல்லது சென்னை, புனித ஜாா்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பணி நியமன அலுவலக தொலைபேசி: 044-25674924 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பயனடையலாம்.
இப்பணி நியமனம் தானியங்கி முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். விண்ணப்பதாரா்கள் போலி முகவா்களை நம்பி ஏமாற வேண்டாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.