காலநிலை அபாயத்தை எதிர்கொள்ளும் பட்டியலில் தமிழகத்துக்கு எந்த இடம்?

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 பிராந்தியங்களின் பட்டியலை சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 
காலநிலை அபாயத்தை எதிர்கொள்ளும் பட்டியலில் தமிழகத்துக்கு எந்த இடம்?

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 பிராந்தியங்களின் பட்டியலை சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 

கிராஸ் டிபென்டன்சி இனிஷியேட்டிவ் என்கிற அமைப்பு கட்டடங்கள், வீடுகள், சாலைகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளால் உண்டாகும் காலநிலை மாற்றத்தை பற்றி பகுப்பாய்வு செய்துள்ளது. இந்நிலையில் சர்வதேச காலநிலையில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாநிலங்கள், மாகாணங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

ஆய்வறிக்கையில், மழை, வெள்ளம், காட்டுத் தீ மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற தீவிர வானிலை, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கும் பகுதிகளின் தரவரிசை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 2,600-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. 

உலக அளவில் 2050ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தில் இருக்கும் முதல் 50 மாநிலங்கள் மற்றும் மாகாணங்களின் பட்டியலில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ளன. 

அதன்படி, காலநிலை அபாயத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் உள்ளது. இதில் பிகார்(22வது இடம்), உத்தரப் பிரதேசம்(25), அசாம்(28), ராஜஸ்தான்(32), தமிழ்நாடு(36), மகாராஷ்டிரா (38), குஜராத்(48), பஞ்சாப்(50) மற்றும் கேரளா(52) ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பை விட, தற்போது வெளியாகியுள்ள காலநிலை மாற்றத்திற்கான கணக்கெடுப்பு மிகவும் ஆபத்து விளைவிக்க கூடியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com