தில்லி புறப்பட்ட விமான என்ஜினில் கசிவு: ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்!

நியூயார்க்கில் இருந்து தில்லி வந்துகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தில்லி புறப்பட்ட விமான என்ஜினில் கசிவு: ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்!

நியூயார்க்கில் இருந்து தில்லி வந்துகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து 300 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் விமானம்(ஏஎல்106) தில்லிக்கு புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நலமுடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தின் என்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com