மீரட்டில் குளிர்பதனக் கிடங்கு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி, 30 பேர் காயம்
மீரட்டில் குளிர்பதனக் கிடங்கு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மீரட்டில் குளிர்பதனக் கிடங்கு மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள தௌராலாவில் கட்டுமானப் பணியின் கீழ் இருந்த குளிர்பதனக் கிடங்கின் மேற்கூரை இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் பலி, 30 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இதையும் படிக்க- மும்பையில் உத்தவ் தாக்கரேவை சந்திக்கும் கேஜரிவால், பகவந்த் மான்
இதுகுறித்து வட்ட அதிகாரி ஆஷிஷ் சர்மா கூறுகையில், “கட்டுமானத்தில் இருந்த குளிர்பதனக் கிடங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டனர். விபத்தில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் சுமார் 26 பேர் எங்கள் குழுக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார். இதனிடையே பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை, கட்டடம் சரிவுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...