மும்பையில் உத்தவ் தாக்கரேவை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சந்திக்கின்றனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரை மும்பையில் உள்ள தமது இல்லத்தில் தேநீர் அருந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று இருவரும் உத்தவ் தாக்கரேவை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளனர்.
இதற்காக அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் இருவரும் ஏற்கெனவே மும்பை வந்தடைந்துவிட்டனர். உத்தவ் தாக்கரேவுடனான இந்த சந்திப்பின்போது அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் ஆகியோர் நடப்பு அரசியல் பற்றி விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிர முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 சிவசேனை எம்.எல்.ஏ.-க்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போா்க்கொடி உயா்த்தினா்.
இதையும் படிக்க- இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
இதையடுத்து, இரு அணிகளாக சிவசேனை பிளவுபட்டது. கட்சியின் பெயா், ‘வில்-அம்பு’ சின்னத்துக்கு இரு அணிகளும் உரிமை கோரிய நிலையில், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு தோ்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கியது. கட்சியின் பெயா் மற்றும் ‘வில்-அம்பு’ சின்னம், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஒதுக்கப்பட்டது.
‘பெரும்பான்மை கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று தோ்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவை அதிமுக வேட்பாளர் தம்பிதுரை! பாமகவுக்கு ஒரு இடம்!

முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு!

அகற்றப்பட்ட ”கர்தவ்ய த்வார்” சு.வெங்கடேசன் பதிவிட்ட விடியோ!

மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

