தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருமணத்தின்போது மணமகள் மரணம்: சினிமா பாணியில் நடந்த திருமணம்

மணமகளின் பெற்றோர் துக்கத்துக்கு இடையேயும் மணமகளின் தங்கையை மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

News image
திருமணத்தின்போது மணமகள் மரணம்: சினிமா பாணியில் நடந்த திருமணம்
Updated On :25 பிப்ரவரி 2023, 10:53 am

DIN

குஜராத் மாநிலத்தில், திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது திடீரென மணமகள் மயங்கி விழுந்து மரணமடைந்தார். மணமகளின் பெற்றோர் துக்கத்துக்கு இடையேயும் மணமகளின் தங்கையை மணமகனுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

சுபாஷ்நகர் பகுதியில் நேற்று திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. ரத்தோரின் மகள் ஹீதலுக்கும், ராணாபாயின் மகன் விஷாலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண நாளும் வந்தது. ஆனால், அதுவே மணமகளின் கடைசி நாள் என்பது யாருக்கும் தெரியாது.

திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க, உற்றார், உறவினர்கள் பாடல்களைப் பாடி இசைத்தபடி குதூகலிக்க, திடீரென மணமகள் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

மணமக்கள் குடும்பத்தில் இதனைக் கேட்டு கலங்கிப் போயினர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உறவினர்கள், திருமணம் நின்றுவிடக் கூடாது என்று பெண் வீட்டாரிடம் பேசி, பெண்ணின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்ய பெற்றோரிடம் சம்மதம் வாங்கினர்.

இறந்த மகளின் உடலை பதப்படுத்திவைத்துவிட்டு, திருமணத்தை முடித்தனர் பெற்றோர். திருமணம் முடிந்த பிறகு, இறந்த மகளின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.