512 கிலோ வெங்காயத்தை ரூ.2க்கு விற்ற விவசாயி: அதுவும் காசோலையாக

அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி ராஜேந்திர துக்காராம் சவானுக்கு கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது.
512 கிலோ வெங்காயத்தை ரூ.2க்கு விற்ற விவசாயி: அதுவும் காசோலையாக

அறுவடை செய்த 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி ராஜேந்திர துக்காராம் சவானுக்கு கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் 512 கிலோ வெங்காயத்துக்கு கிடைத்த பணம் 2 ரூபாய் மட்டுமே.

கடந்த ஆண்டு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.20க்கு விற்றதாகவும், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்ததாகவும் கடும் அதிருப்தியுடன் கூறுகிறார் ராஜேந்திரன்.

எனக்கு ஒரு கிலோ வெங்காயத்துக்கு ஒரு ரூபாய் கொடுத்தார்கள். அதில், வணிகர்கள் போக்குவரத்து செலவு, கூலி, எடைப்போட்ட கட்டணம் என 512 ரூபாயிலிருந்து ரூ.509.50 காசுகளை கழித்துக் கொண்டனர்.

அனைத்துக் கட்டணங்களயும் கழித்துக் கொண்டு ரூ.2.49 பைசாதான் எனக்கு கிடைத்தது. அதையும் மார்ச் மாதம் தேதியிட்ட காசோலையாக ரூ.2 என எழுதிக் கொடுத்துள்ளனர். இந்த 2 ரூபாயும் இப்போதைக்கு எனக்குக் கிடைக்காது அதற்காக 15 நாள்கள் நான் காத்திருக்க வேண்டும். காசோலை என்பதால் அந்த 49 காசுகளையும் குறைத்துவிட்டு வெறும் 2 என எழுதிக் கொடுத்துள்ளனர்.

இப்படி 512 கிலோ வெங்காயத்தை வெறும் 2 ரூபாய்க்கு விற்ற வேதனையோடு வீடு வந்து சேர்ந்துள்ளார் விவசாயி. ஆனால் இவர்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com