பெங்களூரு: செல்லிடப்பேசி எனப்படும் கைப்பேசிகள் திருடப்படுவதையும் களவுபோனவை மற்றவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதையும் தடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை கர்நாடக காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
செல்லிடப்பேசிகள் திருடப்படுவது நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், அதனை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. தொலைத்தொடர்பு துறை சார்பில் மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறை (சிஇஐஆர்) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைப்பேசி திருடப்படுவது தடுக்கப்படும்.
அனைத்து செல்லிடப்பேசி ஆபரேட்டர்களின் பயன்பாட்டில் உள்ள செல்லிடப்பேசிகளின் சர்வதேச செல்லிடப்பேசி கருவி அடையாள எண் (ஐஎம்இஐ) இந்த மத்திய கைப்பேசி அடையாள பதிவு முறையில் இணைக்கப்படும்.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
இது அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மத்திய அமைப்பாக செயல்படும், அப்போது ஒரு செல்லிடப்பேசி திருடப்பட்டுவிட்டால், அந்த செல்லிடப்பேசி ஒரு தொலைத்தொடர்பு சேவையால் தடை செய்யப்பட்டுவிட்டால் அதனை வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தாலும் இயக்க முடியாது. இதன் மூலம் வேறு சிம் கார்டு மாற்றினாலும் அந்த செல்லிடப்பேசி இயங்காது.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
சிஇஐஆர் திட்டம் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு, அனைத்து அலகுகளுக்கும் தனித்தனி லாகின் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் காவல்துறை டிஜி-ஐஜிபி பிரவீன் சூட். ஏற்கனவே தில்லி மற்றும் மகாராஷ்டிரத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மூன்றாவது மாநிலமாக கர்நாடகம் மாறியிருக்கிறது.
சிஇஐஆர், மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், திருட்டுப்போகும் செல்லிடப்பேசிகளை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி, செல்லிடப்பேசி திருட்டுகள் குறையும் என்றும் சூட்தெரிவித்துள்ளார்.
திருட்டுப்போன செல்லிடப்பேசிகளை சிஇஐஆர் மூலம் மற்றவர் பயன்படுத்தாமல் தடை செய்ய, உரிமையாளர் அல்லது புகார் கொடுத்தவர் www.ceir.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். ஒரு வேளை புகார்தாரரால் அதனை தடை செய்ய முடியாவிட்டால், காவல்துறையினர் இ-லாஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் தடை செய்து கொள்ளலாம்.
பிறகு, சிஇஐஆர் மூலம், செல்லிடப்பேசி எங்கே இருக்கிறது என்றும் தகவல் திரட்டும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



