இந்தியாவிலிருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களின் எதிர்ப்புகள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் எழுப்பப்பட்ட கவலைகள் இருந்தபோதிலும், இலங்கை அரசு இந்த வாரம் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளது.
இந்தியாவிலிருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்களின் எதிர்ப்புகள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் எழுப்பப்பட்ட பறவைக் காய்ச்சல் பற்றிய கவலைகள் இருந்தபோதிலும், இலங்கை அரசு இந்த வாரம் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முட்டைகளை இறக்குமதி செய்ய உள்ளது.

இலங்கை அரசின் மாநில வர்த்தக நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளும் பேக்கரி குடிசைத்தொழிலுக்கு ரூ.40 விலையில் வழங்கப்படவுள்ளன.

இதுதொடர்பாக மாநில வர்த்தக நிறுவனத்தின் பொது மேலாளர் சமிலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தற்போதுள்ள சந்தை விலையை விட குறைவான விலைக்கே விற்கப்படும். அதே வேளையில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தீர்மானத்திற்கு இணங்க நாள்தோறும் பயன்பாட்டிற்கு முட்டைகள் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் என்ற அச்சத்தில் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை எதிர்த்துள்ளது.

எவ்வாறாயினும், உள்நாட்டு முட்டை உற்பத்தியை பாதிக்கும் என்று கூறி முட்டையை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் பல மாதங்களுக்கு முன்பே இறக்குமதி செய்திருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் மூலம் நாடு கிட்டத்தட்ட தன்னிறைவு அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளதாக ஜனவரி மாதம் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார். இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டு வந்த சிறப்பு பொருட்கள் வரியை ரூ.50-லிருந்து ரூ.1-ஆக 3 மாத காலத்திற்கு இலங்கை அரசு அரசு குறைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com