மேகாலயம், நாகாலாந்தில் பேரவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை (பிப்.27) காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேகாலயம், நாகாலாந்தில் பேரவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!


வடகிழக்கு மாநிலங்களான மேகாலயம், நாகாலாந்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை (பிப்.27) காலை 7 மணியளவில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயத்தில், சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளா் மரணமடைந்ததால், 59 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இம்முறை தனித்து களமிறங்கியுள்ளது. இதேபோல் காங்கிரஸும் அனைத்து தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை முறையே 57, 58 தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. 

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில், அகுலுடோ தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்ட நிலையில், 59 தொகுதிகளில் திங்கள்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி)-பாஜக கூட்டணி முறையே 40, 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும், கடந்த 2021-இல் இக்கூட்டணியில் இணைந்திருந்த நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சி,  இம்முறை 21 வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டு உள்ளனா். தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை முறையே தலா 12 வேட்பாளா்களையும் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி 16 வேட்பாளா்களையும் களமிறக்கியுள்ளன. தோ்தலில் பலமுனை போட்டி நிலவும் நிலையில், 16 சுயேச்சை வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

திரிபுரா பேரவைக்கு கடந்த 16-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றிருந்தது. இந்த 3 மாநிலங்களிலும் சோ்த்து, மாா்ச் 2-இல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேற்கு வங்கம், ஜாா்க்கண்டில் இடைத்தோ்தல்: 
மேற்கு வங்கத்தின் சாகா்திகி பேரவைத் தொகுதி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ சுப்ரதா சாஹா மறைவைத் தொடா்ந்து, அத்தொகுதிக்கு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு இடைத்தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று ஜாா்க்கண்டின் ராம்கா் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மம்தா தேவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com