நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஹவாய் செருப்பு அணிந்திருப்பவர்கள்... பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

ஹவாய் செருப்பு (ரப்பர் காலணி) அணிந்திருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :27 பிப்ரவரி 2023, 11:21 am

DIN

ஹவாய் செருப்பு (ரப்பர் காலணி) அணிந்திருப்பவர்கள் விமானத்தில் பயணிக்க வேண்டும். அது நடப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று, விமான போக்குவரத்துத் துறையின் வளர்ச்சி பற்றி பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் புதிதாகக் கட்டப்பட்ட விமான நிலையத்தைத் திறந்துவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வருங்காலத்தில் இந்தியாவுக்கு நூற்றுக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பயணிகளுக்கான விமானங்கள் பயன்பாட்டுக்கு வரும். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்று கூறினார்.

2014ம் ஆண்டுக்கு முன்பு வரை காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது ஏர் இந்தியா நிறுவனம் பற்றி எதிர்மறையான செய்திகள்தான் வெளியாகும். அந்த ஆட்சியின்போது பல முறைகேடுகள் நடந்தன என்றும் கூறினார்.

சுமார் ரூ.450 கோடி செலவில் இந்த புதிய விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 300 பயணிகள் வரை இது கையாளும் வகையில் அமைந்துள்ளது. 

இதையும் படிக்க.. வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

மே மாதம் கர்நாடக சட்டப்பேரவை நடைபெறவிருக்கும் நிலையில், அண்மையில் பிரதமர் மோடி தற்போது வருகைதந்திருப்பது ஐந்தாவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.