தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காஷ்மீரி பண்டிட்டைக் கொன்ற பயங்கரவாதி சுட்டுக் கொலை!

காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

News image
Updated On :28 பிப்ரவரி 2023, 6:40 am

DIN

காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

இதுகுறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய்குமார் கூறுகையில், பாதுகாப்புப் படையினருடன் இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி சஞ்சய் சர்மாவை சுட்டுக்கொன்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கொல்லப்பட்ட பயங்கரவாதி அகிப் முஸ்தாக் என அடையாளம் காணப்பட்டார். 

ஞாயிற்றுக்கிழமை காலை புல்வாமாவில் உள்ள அச்சானில் அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வங்கிக் காவலாளியான ஷர்மா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

அங்கிருந்தவர்களால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

புல்வாமாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் திங்கள்கிழமை காஷ்மீரி பண்டிட் சர்மாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.