சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பெண்கள் பலி

சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

News image
Updated On :1 ஜனவரி 2023, 3:16 pm

DIN

சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். 

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பலியான பெண்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் 6 முதல் 7 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். 

காவல்துறையின் முதற்கட்ட தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிட்டத்தட்ட 40 தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.