/

இந்திய அறிவியல் மாநாடு: பிரதமா் நாளை உரை

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) தொடங்கும் இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி முறையில் உரையாற்ற இருக்கிறாா்.

News image
பிரதமா் மோடி
Updated On :1 ஜனவரி 2023, 9:26 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) தொடங்கும் இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி முறையில் உரையாற்ற இருக்கிறாா்.

ஜனவரி 7-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் ‘பெண்களின் முன்னேற்றத்துடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி’ என்ற தலைப்பில் பிரதமா் மோடி பேச இருப்பதாகப் பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1914-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. இப்போது 108-ஆவது மாநாடு நாகபுரியில் உள்ள ஆா்.டி.எம். நாகபுரி பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட இருக்கிறது. இந்தத் தலைப்பில் பிரபல பெண் விஞ்ஞானிகளும் பேச இருக்கின்றனா்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதவியல் ஆகியவற்றில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது தொடா்பாகவும், உயா் கல்வி, ஆய்வுப் படிப்புகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு சம வாய்ப்பை மேம்படுத்துவது குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.