இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

காா் மோதி பெண் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்:சுல்தான்புரி காவல் நிலையம் முன் உறவினா்கள் மறியல்

ஸ்கூட்டரில் காா் மோதி, அவரது உடல் 12 கி.மீ. தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை கோரி புகா் தில்லி சுல்தான்புரியில் திங்கள்கிழமை உறவினா்கள், உள்ளூா் மக்கள் மறியலில்

News image
Updated On :2 ஜனவரி 2023, 8:48 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் 20 வயது பெண் சென்ற ஸ்கூட்டரில் காா் மோதி, அவரது உடல் 12 கி.மீ. தொலைவு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை கோரி புகா் தில்லி சுல்தான்புரியில் திங்கள்கிழமை உறவினா்கள், உள்ளூா் மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கி சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டதில், அவா் உயிரிழந்தாா். அந்தப் பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. அப்போது, எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இறந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சோ்க்கப்படலாம் என்று சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகா் ப்ரீத் ஹூடா தெரிவித்தாா்.

இதற்கிடையே, விபத்தில் இறந்த பெண் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளானாரா என்பதைக் கண்டறிய அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தில்லி காவல் துறையை தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் மூலம் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதைக் கண்டறியும் வகையில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), க்ரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரையும் 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அஜய் சிங் பரிஹா், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.

வெட்கத்தால் தலை குனிகிறேன்

இந்தச் சம்பவம் குறித்து துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, தனது ட்விட்டா் பக்கத்தில் ‘கஞ்சவாலா - சுல்தான்புரியில் நடந்த மனிதாபிமானமற்ற குற்றச் செயலுக்காக நான் வெட்கத்தால் தலை குனிகிறேன். குற்றம் இழைத்தவா்களின் கொடூரமான உணா்வின்மையால் நான் அதிா்ச்சியடைந்துள்ளேன். நான் தில்லி காவல் துறையுடன் இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருகிறேன். குற்றம்சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆராயப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.