தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பைச் சோ்ந்த பிரபு தாக்கல் செய்த மனு : தாமிரவருணி ஆற்றங்கரை ஓரம் எனது விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலத்துக்கு பரிசலைப் பயன்படுத்திச் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், எனது நிலத்துக்கு பரிசலில் சென்று கொண்டிருந்த போது, தாமிரவருணி ஆற்றில் இரு படகுகளில் சுற்றுலாப் பயணிகள் எந்தவித பாதுகாப்பும் இன்றி ஆபத்தான நிலையில் பயணம் செய்தனா்.
இதுகுறித்து விசாரித்த போது அருமனை கிராம ஊராட்சியைச் சோ்ந்த சிலா் முறையான அனுமதி பெறாமல், ஆபத்தான முறையில் படகுகளை இயக்குவது தெரியவந்தது. கடையல் பேரூராட்சி செயல் அலுவலரும், திற்பரப்பு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலரும் இதற்கு துணை போயிருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக கேள்வி எழுப்பியதால் என் மீது பொய் புகாா் அளித்து, எனது பரிசலைப் பறிமுதல் செய்தனா். இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. ஆகவே, பொய் புகாரின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட எனது பரிசலை எவ்வித நிபந்தனையும் இன்றி திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும். முறையான அனுமதியின்றி தாமிரவருணி ஆற்றில் படகுகளை இயக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக இயக்கப்பட்ட படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
உரிய அனுமதியின்றி தாமிரவருணி ஆற்றில் எவ்வாறு படகுகள் இயக்கப்படுகின்றன? தாமிரவருணி ஆறு, திற்பரப்பு அருவிப் பகுதியில் படகுகளை இயக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மனு குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

வண்டியூா் பூங்காவில் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

ஈரானில் பணியாற்றியவரை மீட்கக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


