காரில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் போதையில் இருந்தாரா? அஞ்சலி தாயார் விளக்கம்

தில்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண் அஞ்சலி மது அருந்தியிருந்ததாக அவரின் தோழி கூறிய நிலையில், அதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். 
காரில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் போதையில் இருந்தாரா? அஞ்சலி தாயார் விளக்கம்

தில்லியில் காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண் அஞ்சலி மது அருந்தியிருந்ததாக அவரின் தோழி கூறிய நிலையில், அதற்கு அவரின் தாயார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தில்லியின் சுல்தான்புர் புறநகர்ப் பகுதியில், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது. 

இதில், இளம் பெண் அஞ்சலி சிங், உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் உடல் கூறாய்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், தொடை, கால், முதுகெலும்பு என 40 இடங்களில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், மண்டை ஓடு உடைந்து மூளைப்பகுதி காணாமல் போயிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின்போது அஞ்சலி சிங்குடன் பயணித்த மற்றொரு பெண்ணும் அஞ்சலியும் தோழியுமான நிதி என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அதில், கார் மோதியபோது அஞ்சலியும் தானும் வேறு வேறு பக்கத்தில் விழுந்ததாகவும், கார் நிற்காமல் சென்றதால், அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அஞ்சலி வண்டி ஓட்டும் நிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

காவல் துறை விசாரணையில் நிதி தெரிவித்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக பேசிய அஞ்சலி சிங்கின் தாயார் ரேகா, எனக்கு நிதியை தெரியாது. அவரை நான் பார்த்தது கூட இல்லை. அவர் குடிப்பழக்கம் கொண்டவள் அல்ல. அவள் ஒருநாளும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததில்லை. நிதி கூறுவதை நம்பும் வகையில் இல்லை. அவர் கூறுவது எல்லாம் உண்மைக்கு புறம்பானது. நிதி, என் மகளின் தோழி என்றால், விபத்து நடந்த இடத்திலிருந்து ஏன் ஓட வேண்டும். இதில் சதி உள்ளது. நிதிக்கும் இந்த விபத்தில் தொடர்பு இருக்கலாம். காரில் பயணித்த 5 ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com