

புது தில்லி: காரில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் மரணமடைந்த இளம்பெண் அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற தில்லி துணை முதல்வர் மணீண் சிசோடியா, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதையும் படிக்க.. 40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது
தலைநகர் புது தில்லியின் கஞ்சாவாளா பகுதியில், ஸ்கூட்டர் மீது கார் மோதி, தவறி விழுந்தபோது, காரின் சக்கரத்தில் கால் சிக்கிக் கொண்டதால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், 20 வயது இளம்பெண் அஞ்சலி சிங் பலியானார்.
இதையும் படிக்க.. ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம்
இந்த நிலையில், மணீஷ் சிசோடியா, இன்று அஞ்சலி சிங்கின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, இது மிகக் கொடூரமான சம்பவம். 20 வயது இளம்பெண்தான், அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவருக்கு சகோதர, சகோதரிகள் உள்ளனர். ஒட்டுமொத்த சம்பவமும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.