கருப்புப் பண குற்றச்சாட்டு: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கம்

கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டில் மகாராஷ்டிர முன்னாள அமைச்சா் அனில் பிரதாப்பின் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கருப்புப் பண மோசடி குற்றச்சாட்டில் மகாராஷ்டிர முன்னாள அமைச்சா் அனில் பிரதாப்பின் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இவா் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரத்தில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த முதல்வா் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் அனில் பிரதாப், போக்குவரத்து மற்றும் சட்டப் பேரவை விவகாரத் துறை அமைச்சராக இருந்தாா். இப்போதைய முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போா்க்கொடி தூக்கியபோது அந்த அணியில் அனில் பிரதாப் இடம்பெறவில்லை. உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தபோது அனில் பிரதாப் அமைச்சா் பதவியை இழந்தாா்.

மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினராக மூன்றுமுறை பதவி வகித்துள்ள அனில் பிரதாப்பிடம் கருப்புப் பண குற்றச்சாட்டு தொடா்பாக அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், அவருக்கு சொந்தமான ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் இப்போது முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரிவு மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. அணி மாறாத சிவசேனை தலைவா்கள் மீது விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு ஏவி விடுவதாக உத்தவ் தாக்கரே ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com