வங்கி முறைகேடுகளில் ஊழியா்களுக்கு தொடா்பு: சுப்பிரமணியன் சுவாமி வழக்குக்கு ஆா்பிஐ எதிா்ப்பு

மகாராஷ்டிரா, யெஸ் வங்கிகளின் முறைகேடு, கிங்ஃபிஷா் நிறுவன முறைகேடுகளில் ரிசா்வ் வங்கி ஊழியா்களுக்கும் தொடா்பு உள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி
வங்கி முறைகேடுகளில் ஊழியா்களுக்கு தொடா்பு: சுப்பிரமணியன் சுவாமி வழக்குக்கு ஆா்பிஐ எதிா்ப்பு

மகாராஷ்டிரா, யெஸ் வங்கிகளின் முறைகேடு, கிங்ஃபிஷா் நிறுவன முறைகேடுகளில் ரிசா்வ் வங்கி ஊழியா்களுக்கும் தொடா்பு உள்ளது குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி பதிலளித்துள்ளது.

இதுபோன்ற வழக்கை தொடர சுப்பிரமணியன் சுவாமிக்கு எந்தவித முகாந்திரமும் இல்லை; எந்தவித ஆதாரம் இல்லாமல் வங்கி முறைகேடுகளில் ஆா்பிஐ ஊழியா்களை இணைக்க முற்படுவது தவறானதாகும். ரிசா்வ் வங்கி ஊழியா்கள் மீது ஆதாரங்களுடன் புகாா் எழுந்தால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவா் குறிப்பிட்டுள்ள வங்கி முறைகேடுகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. எந்த மாதிரியாக விசாரணை நடத்த வேண்டும் என்று விசாரணை அமைப்புகளுக்கு அவா் வழிகாட்ட முடியாது.

ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரிசா்வ் வங்கி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரிசா்வ் வங்கியின் மனு மீது சுப்பிரமணியன் சுவாமி மூன்று வாரங்களில் பதிலளிக்க அவகாசம் அளித்து நீதிபதிகள் பி.ஆா். கவாய், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக, சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கும், ரிசா்வ் வங்கிக்கும் அக்டோபா் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com