ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தியும் அழைக்கப்படுவார்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தியும் அழைக்கப்படுவார் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தியும் அழைக்கப்படுவார்: தேவேந்திர ஃபட்னாவிஸ்

ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ராகுல் காந்தியும் அழைக்கப்படுவார் என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தி பழைய விஷயங்களை திடீரென நினைவு கூர்வது போல் தெரிகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பியிருக்க வேண்டிய கேள்விகளை அவர் கேட்கிறார். 

ராமர் கோயில் (அயோத்தியில்) கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் தரிசனத்திற்கு ராகுல் காந்தியும் அழைக்கப்படுவார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

முன்னதாக வியாழன் அன்று தெற்கு திரிபுராவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித்ஷா, "ராமர் கோவில் கட்டுவதற்கு சட்டரீதியான தடைகளை ஏற்படுத்தி காங்கிரஸ் தடுத்தது.

ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறகே, இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com