ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர்.
ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் இளநிலை அதிகாரி உள்பட 3 ராணுவ வீரர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் வாகனம் பனி மூடிய பாதையில் சறுக்கி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்தது. இதில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகிய 3 பேரும் இறந்ததாகவும் அவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக மாச்சல் பகுதியில் கடும் பனி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயிலில் தேரோட்டம்

புளியறை அருகே முதியவா் வெட்டிக்கொலை

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

வைகையாற்றில் எழுந்தருளும் அழகருக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, பட்டு வஸ்திரம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


