வீரமரணம் அடைந்த தில்லி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி!

வீரமரணம் அடைந்த தில்லி காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி!

கொள்ளையனால் கொல்லப்பட்ட தில்லி காவல் உதவி ஆய்வாளர் ஷம்பு தயாள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளார். 
Published on

கொள்ளையனால் கொல்லப்பட்ட தில்லி காவல் உதவி ஆய்வாளர் ஷம்பு தயாள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கேஜரிவால் கூறுகையில், 

மற்றவர்களைக் காப்பாற்றும்போது ஷம்பு தயாள் தனது உயிரைத் துறந்துள்ளார். அவரை நினைத்து பெருமை கொள்கிறேன். அவரது உயிர் விலைமதிப்பற்றது. 

அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிப்பதாக கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தில்லி மாயாபுரியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஷம்பு குற்றவாளியைப் பிடிக்கும்போது, குற்றவாளி சட்டையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமாரியாக காவலரை குத்தியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த காவலரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காவலர் சிகிச்சை பலனின்றி ஜனவரி 8ஆம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com