தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :11 ஜனவரி 2023, 10:26 am

DIN

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை(ஜன. 4) அனுமதிக்கப்பட்டார்.

இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல்நிலை படிப்படியாக சீராகி வருவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சோனியா காந்தி நேற்று(ஜன. 10) மாலை 3 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் தகவல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.