தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம் பறிமுதல்

புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2023, 2:24 pm

புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 3-ம் தேதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி பிரமோத் குமார் ஜெனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவனேஸ்வரில் உள்ள ரயில்வே முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

பிரமோத் குமார் ஜெனாவிடம் இருந்து வங்கி மற்றும் அஞ்சலக கணக்கில் இருந்த சுமார் ரூ.2.5 கோடி மற்றும் நிலம் தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த சோதனைகள் தொடர்பாக சிபிஐ இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில், மீட்கப்பட்ட தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.5 கோடியாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.