தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடைப்பயணத்தில் ராகுலை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் பரபரப்பு! 

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

News image

நடைப்பயணத்தில் ராகுலை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் பரபரப்பு! 

Updated On :17 ஜனவரி 2023, 8:13 am

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தியை கட்டிப்பிடிக்க முயன்ற நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கடும் குளிருக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை காலை நடைப்பயணம் இன்று மீண்டும் தொடங்கியது. 

இந்நிலையில், ஜாக்கெட் அணிந்திருந்த நபர் ஒருவர் காங்கிரஸ் தலைவரை நோக்கி விரைந்து சென்று அவரை கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். 

சம்பவ இடத்திலிருந்த பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங், ராஜா வாரிங் மற்றும் காந்தியுடன் வந்த மற்ற கட்சிக்காரர்கள் அவரை தடுத்து நிறுத்தி, தள்ளிவிட்டனர். 

இது பாதுகாப்பு மீறல் அல்ல என்று போலீஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமையன்று காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சௌத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, நடைப்பயணம் 24 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

Story image

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைப்பயணம் இடைநிறுத்தப்பட்ட நிலையில், இன்று ஃபதேகர் சாஹிப்பில் உள்ள சிர்ஹிந்தில் இருந்து மீண்டும் தொங்கியது. இந்த நடைப்பயணம் இன்றிரவு கேரியனில் நிறுத்தப்படுகிறது. 

செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த பயணம் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவடைந்து, ஜம்மு-காஷ்மீரின் தலைநகரில் ராகுல்காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.