தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கென்யா நாட்டிலிருந்து வந்த நாமக்கல் இளைஞருக்கு கரோனா!

கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் திரும்பிய இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

News image
Updated On :18 ஜனவரி 2023, 5:09 am

DIN

நாமக்கல்: கென்யா நாட்டில் இருந்து நாமக்கல் திரும்பிய இளைஞருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் கென்யா நாட்டில் தனியார் துறையில் பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி இரு நாள்களுக்கு முன்பு அவர் நாடு திரும்பினார். 

கென்யாவிலிருந்து ஷார்ஜா வழியாக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய சளி மாதிரிகள் சென்னையில் உள்ள கரோனா ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அதில் கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டார். மேலும், அவருடைய குடும்பத்தில் உள்ள 6 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெ. பிரபாகரன் உத்தரவின் பேரில், காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கூறுகையில், காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அவரது குடும்பத்தில் உள்ள 6 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  கரோனாவால் பாதிக்கப்பட்டவர் நலமுடன் உள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.