தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இரட்டை முகம் கொண்ட பாஜக சொல்வதொன்று, செய்வதொன்று: மம்தா

இரட்டை முகம் கொண்ட பாஜக தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்குப் பின் செய்வது ஒன்றாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பாஜகவைத் தாக்கியுள்ளார். 

News image
Updated On :18 ஜனவரி 2023, 10:38 am

இரட்டை முகம் கொண்ட பாஜக தேர்தலுக்கு முன் ஒரு வாக்குறுதியும், தேர்தலுக்குப் பின் செய்வது ஒன்றாக உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பாஜகவைத் தாக்கியுள்ளார். 

தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் வடக்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

அப்போது அவர் உரையில், வடகிழக்கு மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி தனது திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே என்று வலியுறுத்தினார். 

பாஜக இரட்டை முகமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் எதையாவது சொல்லிவிட்டு, அதன்பிறகு வேறு எதையாவது செய்கிறது. 

காவி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய பாஜக அரசு பணம் தருகிறது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். 

மேகாலயாவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 

இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும் வகையில் சிறந்த ஆட்சியை வழங்கக்கூடிய ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ். 

மேகாலயாவில் மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை நாங்கள் தர விரும்புகிறோம் என பானர்ஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.