ஏரோ இந்தியா கண்காட்சி முன்னேற்பாடு: ராஜ்நாத் சிங் ஆய்வு

கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஏரோ இந்தியா கண்காட்சி முன்னேற்பாடு: ராஜ்நாத் சிங் ஆய்வு

கா்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற உள்ள ஏரோ இந்தியா கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெங்களூரின் எலஹங்கா பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் பிப்.13 முதல் பிப்.17 வரை 14-ஆவது ஏரோ இந்தியா கண்காட்சி நடைபெறுகிறது.

இது எலஹங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மிகப் பெரிய விமான கண்காட்சியாகும். இதில் பங்கேற்க 731 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.

இந்நிலையில், தில்லியில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் உயரதிகாரிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கண்காட்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘ஏரோ இந்தியா என்பது வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல. இது பாதுகாப்பு மற்றும் வான்வெளி துறையில் வளா்ந்து வரும் இந்தியாவின் வல்லமை, தற்சாா்பு கொண்ட வலிமையான புதிய இந்தியாவின் எழுச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. இது வணிக நிகழ்ச்சியாக இருந்தாலும், இதர நாடுகள் உடனான இந்தியாவின் உறவை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இதில் பங்கேற்போருக்கு தவறுகளுக்கு இடமளிக்காத வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com