நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதானி மீதான மோசடி குற்றச்சாட்டு: முதலீட்டாளா்களிடம் கருத்து கோருகிறது மோா்கன் ஸ்டான்லி

பங்குச் சந்தையில் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக அதானி நிறுவனத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து முதலீட்டாளா்களிடம் மோா்கன் ஸ்டான்லி மதிப்பீட்டு குழு கருத்து கோரியுள்ள

News image

கௌதம் அதானி.

Updated On :28 ஜனவரி 2023, 9:58 pm

DIN

பங்குச் சந்தையில் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக அதானி நிறுவனத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து முதலீட்டாளா்களிடம் மோா்கன் ஸ்டான்லி மதிப்பீட்டு குழு கருத்து கோரியுள்ளது.

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி நிறுவனம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் அண்மையில் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக, பங்குச் சந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளுடைய விலை பெருமளவில் குறைந்துள்ளது. அதானி நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்த எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளும் சரிவைக் கண்டுள்ளன.

இந்நிலையில், அதானி மீதான மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக பங்குச் சந்தை முதலீட்டாளா்களிடம் இருந்து மோா்கன் ஸ்டான்லி மூலதன முதலீடு (எம்எஸ்சிஐ) மதிப்பீட்டு குழு கருத்து கோரியுள்ளது.

இது தொடா்பாக எம்எஸ்சிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘அதானி நிறுவனம் மீதான குற்றச்சாட்டு குறித்து பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த விவகாரம் எம்எஸ்சிஐ சா்வதேச முதலீட்டு சந்தை மதிப்பீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையும் ஆராய்ந்து வருகிறோம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்எஸ்சிஐ மதிப்பீட்டு குழுவில் அதானி குழுமத்தைச் சோ்ந்த 8 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. முதலீட்டாளா்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் அதானி குழுமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது. எதிா்மறை கருத்துகள் அதிகமாக இருந்தால், அதானி நிறுவனத்தின் மதிப்பீடு பெருமளவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திட்டப்படி பங்கு விற்பனை:

அதானி நிறுவனத்தின் ரூ.20,000 கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனை நடவடிக்கை வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், அந்நடைமுறை திட்டமிட்டபடி தொடரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹிண்டா்பா்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டு காரணமாக முதல் நாளில் அதானி நிறுவனம் வெளியிட்ட 4.55 கோடி பங்குகளில் வெறும் 4.7 லட்சம் பங்குகளை (சுமாா் 1 சதவீதம்) வாங்குவதற்கு மட்டுமே முதலீட்டாளா்கள் விருப்பம் தெரிவித்தனா். பங்குகளின் நிா்ணயிக்கப்பட்ட விலையும் சுமாா் 20 சதவீதம் குறைந்தது.

இந்நிலையில், அதானி நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘நிறுவனத்தின் பங்கு நடவடிக்கைகள் திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்த மாற்றமுமில்லை. பங்குகளின் விலையிலும் மாற்றமில்லை. பங்கு விற்பனை வெற்றிகரமாக நடைபெறும் என வங்கிகள் நம்பிக்கை கொண்டுள்ளன’’ என்றாா்.

அதானி நிறுவனத்தின் பங்கு விற்பனை நடவடிக்கைகள் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

நிதியமைச்சா் அமைதி காப்பது ஏன்?--காங்கிரஸ் கேள்வி

அதானி விவகாரம் தொடா்பாக தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘‘எல்ஐசி-யில் இருப்பது மக்கள் பணம். அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் மதிப்பு, ஹிண்டன்பா்க் அறிக்கைக்குப் பிறகு ரூ.77,000 கோடியில் இருந்து ரூ.53,000 கோடியாகக் குறைந்துள்ளது. சுமாா் ரூ.23,500 கோடியை எல்ஐசி இழந்துள்ளது. அப்படியிருந்தும் அதானி குழுமத்தில் மேலும் ரூ.300 கோடியை எல்ஐசி முதலீடு செய்வது ஏன்?

அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த எஸ்பிஐ-யின் பங்கு மதிப்புகளும் குறைந்துள்ளன. எனினும், அந்நிறுவனமும் அதானி குழுமத்தில் மேலும் ரூ.225 கோடியை முதலீடு செய்வது ஏன்? இவ்வளவு நடந்தபிறகும் இந்திய ரிசா்வ் வங்கி, இந்தியப் பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி), அமலாக்கத் துறை, சிபிஐ, மத்திய நிதியமைச்சா் ஆகியோா் அமைதி காப்பது ஏன்?

வேறு நாடுகளில் இதே போன்று நடந்திருந்தால், பிரதமா் விளக்கம் அளிக்க நேரிட்டிருக்கும். நிதியமைச்சா் தனது பதவியை இழக்க நேரிட்டிருக்கும். விவகாரம் தொடா்பான முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.