பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி முன்கூட்டியே நிறைவு?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி முன்கூட்டியே நிறைவு?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பாதி திட்டமிட்டதற்கு முன்கூட்டியே நிறைவடைய வாய்ப்புள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் ஆவணங்களின் ஆய்வுக்காக ஒரு மாத காலம் இடைவெளி விடப்படவுள்ளது. அதற்குப் பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் மாா்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 10-ஆம் தேதியே முடித்துக் கொள்ள எம்.பி.க்கள் சிலா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். மக்களவை அலுவல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11, 12 தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளாக இருப்பதால் அப்போது கூட்டத்தொடா் நடைபெறாது. அதையடுத்து பிப்ரவரி 13-ஆம் தேதி மட்டும் நடைபெறும் அமா்வுக்கு வர வேண்டியுள்ளதால் வெள்ளிக்கிழமையுடன் (பிப்ரவரி 10) கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை முடித்துக் கொள்ள எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்கோரிக்கை குறித்து அரசிடம் எடுத்துரைக்கப்படும் என அவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com