ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாட்டில் கரோனா சிகிச்சையில் 1,490 பேர்!

நாடு முழுவதும்  கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,490 ஆகக் குறைந்துள்ளது. 

News image
Updated On :2 ஜூலை 2023, 5:09 am

DIN

நாடு முழுவதும்  கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,490 ஆகக் குறைந்துள்ளது. 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று புதிதாக 53 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மொத்த பாதிப்பு 4.49 கோடியாகும். 

இன்று காலை 8 மணி அறிக்கையின்படி கரோனா பாதித்து  இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 5,31,907 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 98.81 சதவிகிதமாக உள்ளது. அதே நேரத்தில் இதுவரை 1.18 சதவிகிதம் பேர் கரோனா பாதித்து இறந்துள்ளனர். 4,44,60,884 பேர் கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.