புற்றுநோய் இருப்பதாக தவறான மருத்துவ ஆய்வறிக்கை: கன்னட நடிகைக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு

புற்றுநோய் இருப்பதாக தவறான மருத்துப் பரிசோதனை அறிக்கை வழங்கிய வழக்கில் கன்னட நடிகைக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐகான் ஆய்வகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புற்றுநோய் இருப்பதாக தவறான மருத்துவ ஆய்வறிக்கை: கன்னட நடிகைக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு

பெங்களூரு: கன்னட நடிகைக்கு புற்றுநோய் இருப்பதாக தவறான மருத்துப் பரிசோதனை அறிக்கை வழங்கிய வழக்கில், ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு ஐகான் ஆய்வகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கர்நாடகம் மாநிலம், விஜயநகரைச் சேர்ந்த நடிகை சித்ரா(35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பிப்ரவரி 25, 2022 அன்று பசவேஸ்வராநகரில் உள்ள ஐகான் டயக்னாஸ்டிக் சென்டரில் உடல் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்ததோடு கடும் மனவேதனையடைந்துள்ளார்.

மேலும் இந்த தகவலை தனது பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது எனவும் அவர் கவலைப்பட்டுள்ளார். இருப்பினும் தனது உடல்நிலையில் நம்பிக்கை கொண்ட அவர், அடுத்தடுத்து இரண்டு டயக்னாஸ்டிக் சென்டரில் உடல் பரிசோதனை செய்திருக்கிறார். இந்த இரண்டு பரிசோதனைகளிலும் அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாக முடிவு வந்திருக்கிறது.

இதன் மூலம் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் ஆரம்பத்தில் தான் உடல் பரிசோதனை மேற்கொண்ட ஆய்வகம் தனக்கு தவறான மருத்துப் பரிசோதனை அறிக்கை அளித்திருப்பதை உறுதி செய்துகொண்டுள்ள நடிகை சித்ரா, ஐகான் டயக்னாஸ்டிக் ஆய்வகம் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வந்துள்ளது. அதில், தவறான மருத்துவப் பரிசோதனை அறிக்கை அளித்தமைக்காக நடிகைக்கு ரூ. 1.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு சம்மந்தப்பட்ட ஆய்வகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com