கேரளத்தில் கடந்த 2 நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4ம் தேதி இரவு முதல் கேரள மாநிலம் முழுவதும் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறுகள், அணைகள் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் ஜூலை 5(இன்று) மாநிலத்தின் 14 மாவட்டங்களில் கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாள்களில் மழையின் தீவிரம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தின் தமராசரி தாலுகாவில் 68 வயதுடைய நபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாநிலத்தில் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: தங்கம் விலை உயர்ந்தது: எவ்வளவு?
இந்நிலையில், கேரள மாநிலத்தில் முண்டக்காயம் சென்னாப்பாறை ரப்பர் தோட்டத்தில் உள்ள ஓடையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரைக் கடக்க முடியாமல் ரப்பர் தோட்டத்தில் 17 தொழிலாளர்கள் சிக்கினர்.
தகவலறிந்து வந்து இரு கரைக்கும் இடையே கயிறு கட்டி மீட்புப் படையினர் தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ. 2.03 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அடிக்கல்

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்கத்தினா் தா்னா

கீழச்சிவல்பட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

மங்கலம் ஸ்ரீபோா்மன்னன் லிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

