/

இதற்கு பெயர்தான் வளர்ச்சியா? - மோடிக்கு பிரசாந்த் பூஷண் கேள்வி

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டிருக்கும் ஒப்பந்தங்களை வழக்குரைஞர் பிரசாந் பூஷண் விமர்சித்துள்ளார். 

News image

பிரசாந்த் பூஷண்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:47 am IST

புதுதில்லி: அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டிருக்கும் ஒப்பந்தங்களை வழக்குரைஞர் பிரசாந் பூஷண் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக, அதிக செலவு கொண்ட ட்ரோன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது மட்டுமல்லாமல், குஜராத்தில் ஒரு சிப் அசெம்பிளிங் ஆலையை அமைக்கும் ஒரு அமெரிக்க தனியார் நிறுவனத்தின் செலவில் 70 சதவிகித மானியம் வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார் மோடி. 

2.75 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டில் உருவாக்கப்படும் ஆலையில் வெறும் 0.825 பில்லியன் டாலர் மட்டும் முதலீடு செய்த மைக்ரான் 100 சதவிகித உரிமம் பெற்றிருக்கும். இதற்கு பெயர்தான் வளர்ச்சியா? என்று மோடிக்கு பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.