கடந்த இரண்டு ஆண்டுகளில் தில்லியின் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடத்தில் தில்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: இந்தியாவில் மின் வாகனங்கள் அதிகம் விற்காதது ஏன்?
அப்போது அவர் பேசியதாவது: சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்காமல் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,391 மாணவர்கள், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற 730 மாணவர்கள் மற்றும் 106 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களால் இந்த மைதானம் நிரம்பியுள்ளது. இரண்டு ஆண்டுக்கு முன்னதாக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் 64 மாணவர்களும், ஜேஇஇ தேர்வில் 384 மாணவர்களும் மற்றும் நீட் தேர்வில் 496 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி இன்றியமையாதது. நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி என்பது மிக முக்கியத் தேவை. தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை மோசமான நிலையில் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

