நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வாரங்கல் காளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தெலங்கானாவின் வாரங்கலில் உள்ள பிரபல பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு மேற்கொண்டார். 

News image
Updated On :8 ஜூலை 2023, 3:18 pm IST

தெலங்கானாவின் வாரங்கலில் உள்ள பிரபல பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு மேற்கொண்டார். 

பிரதமர் மோடியுடன் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தெலங்கானா பாஜக தலைவர் ஜி.கிஷன் ரெட்டி மற்றும் பிற தலைவர்களும் இணைந்து வழிபாடு மேற்கொண்டனர். 

நேற்று சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி ஹைதராபாத் வந்தடைந்தார். இந்நிலையில் வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோயிலில் இன்று வழிபாடு மேற்கொண்டார். 

நெடுஞ்சாலை முதல் ரயில்வே வரை வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் ரூ.6,100 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். பின்னர் அவர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

பிரதமர் தொடங்கவிருந்து பல்வேறு திட்டங்கள் தெலங்கானா மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.