ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:18 pm

DIN

தில்லியில் மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்தது; பின்னா் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டினால் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது பரபரப்பை கிளப்பியது. 

அதேநேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைக்கு தமிழக அரசு அனுமதி கோரும் விவகாரத்தில் ஆளுநரின் பதில், தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது என மோதல் அதிகரித்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி சென்ற நிலையில் சனிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். 

இதன் தொடர்ச்சியாக இன்று தில்லியில் மத்திய அரசின் மதிய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியை சந்தித்துப் பேசியுள்ளார். 

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட சிக்கல் எழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் பல பிரமுகர்களை சந்திக்கும் ஆளுநர், ஜூலை  13 ஆம் தேதி மாலை சென்னை திரும்புகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.