பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜெயின் துறவி கொலை: கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்

கர்நாடகத்தில் ஜெயின் துறவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :12 ஜூலை 2023, 6:27 am

DIN

கர்நாடகத்தில் ஜெயின் துறவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடகாவின் சிக்கோடி தாலுகாவில் உள்ள ஹிரேகோடி கிராமத்தில் உள்ள மடத்தில் தங்கியிருந்த ஜெயின் துறவி ஒருவர் காணாமல் போனதாக முதலில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் இறந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. 

கடன் வாங்கிய விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயின் துறவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், 'சட்டம் மற்றும் காவல்துறைக்கு பயம் இல்லை. சமூக விரோதிகள் அனைவரும் வெளிப்படையாக வெளியே வந்துள்ளனர். இது சாமானியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு மறைமுகமாக இதுபோன்ற காரியங்களுக்கு துணைபோகிறது. ஜெயின் துறவி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதுகுறித்து மாநில அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.