யமுனையில் வெள்ளம்: தத்தளிக்கும் தில்லி!

தலைநகர் தில்லியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
யமுனையில் வெள்ளம்: தத்தளிக்கும் தில்லி!

தலைநகர் தில்லியில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் தொடர் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தில்லி, ஹரியாணா, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டிய நிலையில், தில்லியில் உள்ள பல சாலைகளை ஆற்று நீர் ஆக்கிரமித்துள்ளது. 

இன்று காலை நிலவரப்படி யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.48 மீட்டரை தாண்டியுள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் யமுனை ஆற்றுக்கு அருகேயுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

தாழ்வான சாலைகளில் வெள்ள நீர் பெருகெடுத்துள்ளதால், இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

வெள்ள நீர் புகுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளன. தில்லி பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தில்லி செங்கோட்டை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. தில்லி சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நகரின் ஒரு சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. 

ஜூலை 8, 9 ஆகிய நாள்களில் மட்டும் தில்லியில் சுமார் 153 மி.மீ மழை பெய்துள்ளது. 40 ஆண்டுகளில் அதிகபட்ச மழைப்பொழிவு இது. அண்மைக்காலங்களில் இதுபோன்று நிகழ்ந்ததில்லை. 

இதுபோன்ற மழைப்பொழிவை எதிர்கொள்ளும் வகையில் தில்லியில் வடிகால் அமைப்புகள் கட்டமைக்கப்படாததினால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இப்போதுள்ள மழை வடிகால் கட்டமைப்பு கடந்த 1976-ல் அமைக்கப்பட்டது. தில்லியில் அப்போதைய மக்கள்தொகை 60 லட்சம். ஆனால் இப்போது மக்கள்தொகை நான்கு மங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com