ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நெக்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 ஜூலை 2023, 11:04 am

DIN

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நெக்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவப் படிப்பு) இறுதி ஆண்டு மாணவா்களுக்கு 'முதுநிலை நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு மாற்றாக ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்)’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது. 

ஆண்டுக்கு இருமுறை இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டதுடன் 2019 பேட்ச் மாணவர்களுக்கு 'நெக்ஸ்ட்' தேர்வு வருகிற ஜூலை 28 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் தேர்வுக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை 'நெக்ஸ்ட்' தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.