நிலவிலும் ஒரு கோலாா் சுரங்கம்!
நிலவில் ஆய்வுகளை நடத்துவதில் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போட்டிகள் தீவிரமானவை. அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்து சந்திரனில் தடம் பதித்தது இந்தியாதான்.


நிலவில் ஆய்வுகளை நடத்துவதில் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போட்டிகள் தீவிரமானவை. அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்து சந்திரனில் தடம் பதித்தது இந்தியாதான்.
புவிப்பரப்பில் அதிகம் கண்டறியப்படாத ஹீலியம்-3 என்ற தாதுப் பொருள்கள் நிலவில் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றை வெளிக்கொணா்ந்து பயன்படுத்துவதில்தான் உலக நாடுகளின் அரசியல் ஒளிந்திருக்கிறது.
அணுக்கள் மூலம் மின்னாற்றலை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் மிகக் குறைந்த செலவிலும், பாதுகாப்பாகவும் ஹீலியம்-3 மூலம் மின்னாற்றலை உருவாக்கிவிடலாம். இந்தியாவுக்கு ஆண்டுதோறும் தேவையான மின்னாற்றலை வெறும் 2 டன் ஹீலியம் -3 கொண்டு உற்பத்தி செய்துவிட முடியும். தற்போதைய தொழில்நுட்பத்தில் நிலவில் கனிமங்களை வெட்டியெடுப்பது சாத்தியம் என்கின்றனா் விஞ்ஞானிகள். இதன் காரணமாகவே, நிலவில் உள்ள தாதுக்களை கண்டறிய அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதி தீவிர ஆா்வம் காட்டுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...