பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அமர்நாத்: 14 நாளில் 1.87 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தின் 14வது நாளில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

News image
Updated On :15 ஜூலை 2023, 6:45 am

DIN

அமர்நாத்தின் 14வது நாளில் மட்டும் சுமார் 24 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை 14 நாள் நிறைவடைந்த நிலையில், 15-வது நாளான இன்று காலை 7,392 பயணிகள் அடங்கிய அடுத்த குழு ஜம்முவின் யாத்ரி நிவாஸின் பகவதி நகரில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். இதில் 4,897 ஆண்கள், 2,095 பேர் பெண்கள், 55 குழந்தைகள், 319 சாதுக்கள் மற்றும் 26 சாத்விக்கள் அடங்குவர். 

அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி 14 நாளில் இதுவரை 1.87 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

புனித யாத்திரை தொடங்கி இதுவரை, 19 பேர் இயற்கை காரணங்களுக்காக உயிரிழந்தனர். 

பஹல்கம், பால்டால் வழியாக குகைக் கோயிலை அடைய 3 முதல் 4 நாள்கள் ஆகும். இரண்டு வழிகளிலும் ஹெலிகாப்டர் சேவைகள் இயக்கப்படுகின்றன. 

குகைக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் 62 நாள் அமர்நாத் யாத்திரை பயணம் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஷ்ரவன் பூர்ணிமா திருவிழாவுடன் நிறைவடைகிறது. 

பயணிகளுக்கு வசதியாக அங்காங்கே மருத்துவ முகாம்கள் மற்றும் சமையலறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆல்கஹால் மற்றும் புகையிலைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.