சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அவதூறு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு

அவதூறு வழக்கில் குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஜூலை 2023, 11:33 am

DIN

அவதூறு வழக்கில் குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

2019, மக்களவைத் தோ்தலையொட்டி கா்நாடகத்தில் பிரசாரத்தில் பேசிய ராகுல், மோடி சமூகத்தினரை இழிவுபடுத்தியதாகக் கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ பூா்ணேஷ் மோடி வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த சூரத் விசாரணை நீதிமன்றம், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மாா்ச் 23-ஆம் தேதி தீா்ப்பளித்தது. 

குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி மக்கள் பிரதிநிதியாகத் தொடர முடியாது. 

அதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா் பதவியிலிருந்து ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் கோரியும் ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் அமா்வு நீதிமன்றம் ராகுலுக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

தண்டனைக்கு தடை கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக், ‘சட்டப்படி சரியான உத்தரவை விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. எனவே, ராகுலின் மேல் முறையீட்டு மனு மீது அமா்வு நீதிமன்ற நீதிபதி விரைந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராகுலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று கடந்த 7-ஆம் தேதி தீா்ப்பளித்தாா். இந்த நிலையில் குஜராத் உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் உயர்நீதிமன்றம் ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.