கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹிமாசல்: ஒட்டுமொத்த கிராமத்தை அடித்துச் சென்ற வெள்ளம்

ஹிமாசலப் பிரதேசம், ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தையே, வெள்ளம் ஒட்டுமொத்தமாக அடித்துச் சென்றுவிட்டது.

News image
Updated On :17 ஜூலை 2023, 10:59 am


சிம்லா: ஹிமாசலப் பிரதேசம், ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தையே, வெள்ளம் ஒட்டுமொத்தமாக அடித்துச் சென்றுவிட்டது.

சனிக்கிழமை ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில், அந்த கிராமத்திலிருந்த வீடுகளும் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி சின்னாபின்னமாகின.

உள்ளூர் நிர்வாகமானது, கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளது.

ஏராளமான பணத்தை செலவிட்டு விவசாயம் செய்த விவசாயிகள், தங்களது விளைநிலங்கள் முழுவதையும்ட வெள்ளம் சூழ்ந்துகொண்டதால் சொல்லொணாத் துயரத்தில் உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது வீட்டு, சிறுக சிறுக சேமித்து தற்போதுதான் புதிய வீடு கட்டியதாகவும், புதிய வீடும் இந்த வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டதாகவும் மற்றொரு நகர் கவலை தெரிவித்துள்ளார்.

அந்த கிராமத்தில் வாழும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அனைத்துமே தற்போது வீடற்றவர்களாக மாறிவிட்டனர்.

ஒட்டுமொத்த கிராமமே சூறையாடப்பட்டது போல காணப்படுவதாகவும், அரசுதான் உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.