பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், பெங்களூருவில் நடைபெற்றுவரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத் பவார் நாளை பங்கேற்பார் எனக் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு 16 கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

