2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டமிட்டம்:  5 தீவிரவாதிகள் கைது 

கர்நாடகாவின் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டமிட்டதாக தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2023, 5:51 am

DIN


பெங்களூரு (கர்நாடகா): கர்நாடகாவின் பெங்களூருவில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டமிட்டதாக தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகாவின் பெங்களூருவில் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டமிட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், ஒரு குழுவினர் அந்த இடத்தைக் கண்டுபிடித்து, தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும்  "சயீத் சுஹேல், உமர், ஜானித், முதாசிர் மற்றும் ஜாஹித் ஆகிய ஐந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெடிபொருட்கள், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பெங்களூருவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்கள் இங்கு குண்டுவெடிப்புக்கு ஒரு துல்லியமான சதி திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.  

இவர்கள் ஐந்து பேரும் 2017 ஆம் ஆண்டு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் மற்றும் அங்கு அவர்களுக்கு தீவிரவாதிகளுடனான தொடர்பையும் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்" என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டமிட்டிருந்த நிலையில், குற்றப்பிரிவு போலீசாரின் துரித நடவடிக்கையால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.