ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

அவா்களிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக, ஸ்ரீநகரில் செயல்படும் ராணுவத்தின் சினாா் படைப் பிரிவு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அதில், ‘குப்வாராவின் மச்சில் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையும் புதன்கிழமை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

அவா்களிடம் இருந்து 4 ஏகே ரக துப்பாக்கிகள், 6 கையெறி குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற பகுதியில் தொடா்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com