தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காா்கேயுடன் எதிா்க்கட்சித் தலைவா்கள் சந்திப்பு: நாடாளுமன்ற கூட்டத்தொடா் குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவை ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) தலைவா்கள் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 8:03 pm

DIN

காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேவை ‘இந்தியா’ (இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி) தலைவா்கள் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காா்கேயின் அறையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின்போது எழுப்பப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.

மணிப்பூா் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற எதிா்க்கட்சிகள் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கூட்டணிக்கு இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சிக் கூட்டணி என்று பெயா் சூட்டப்பட்டது. இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு இடையே முதல்முறையாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் கோரிக்கை மிகவும் தெளிவானது. கடந்த மே 3-ஆம் தேதியிலிருந்து மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும். இதைத்தொடா்ந்து விவாதம் நடைபெற வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.