தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அமர்நாத்: ஒரேநாளில் 17 ஆயிரம் பேர் தரிசனம்!

அமர்நாத் யாத்திரையின் 19வது நாளில் 17 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

News image
கோப்புப் படம்.
Updated On :21 ஜூலை 2023, 6:59 am

DIN

அமர்நாத் யாத்திரையின் 19வது நாளில் 17 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 19 நாள்களில் இதுவரை 2.84 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 

இந்நிலையில், 6,523 பயணிகள் அடங்கிய குழு இன்று காலை ஜம்முவின் யாத்ரி நிவாஸில் இருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது. 2777 பேர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்தும், 3,746 பேர் பகல்காம் முகாமிலிருந்தும் புறப்பட்டுள்ளனர். 

யாத்திரை தொடங்கியது முதல் இதுவரை 30 பேரில், 29 பேர் இயற்கை காரணங்களால் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் கற்கள் சரிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். யாத்திரைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதியும் உள்ளது. 

தொடர்ந்து ஆகஸ்ட் 31 வரை யாத்திரை நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.